'சர்தார்2' படப்பிடிப்பில் விபத்து - சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு

'சர்தார் 2' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தார்.;

Update: 2024-07-17 05:45 GMT

சென்னை,

சர்தார் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. அதன்படி, 'சர்தார் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 15-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன், ரத்ன குமார், நடிகர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 'சர்தார் 2' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் நடந்து வந்த படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் விபத்தில் உயிரிழந்தார். படப்பிடிப்பின்போது 20 அடி உயரத்தில் இருந்து சண்டை பயிற்சியாளர் ஏழுமலை தவறி விழுந்ததையடுத்து அவர் அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை உயிரிழந்துள்ளார். மேலே இருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரல் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்