மலையாள டைரக்டர் இயக்கும் திகில் படத்தில், சுனைனா

பிரபல மலையாள டைரக்டர் டோமின் டி சில்வா இயக்கும் திகில் படத்தில் சுனைனா நடிக்கிறார்.

Update: 2022-04-08 11:10 GMT
‘காதலில் விழுந்தே ன்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், சுனைனா. ‘வம்சம்’, ‘பசங்க -2’ உள்பட சில படங்களில் நடித்த இவர், கொஞ்ச காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இவரை மீண்டும் திரையுலகுக்கு அழைத்து வந்தவர்,
டை ரக்டர் சீனுராமசாமி.

இவர் இயக்கிய ‘நீர்ப்பறவை ’ படத்தில் சுனைனா கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து, ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் நடித்தார். இதையடுத்து அவர், ‘ரெஜினா’என்ற திகில் படத்தில் நடிக்கிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். சதீஷ் நாயர் தயாரிக்கிறார். பிரபல மலையாள டைரக்டர் டோமின் டி சில்வா டைரக்டு செய்கிறார்.

“சாதாரண நடுத்தர குடும்ப தலைவியாக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களை சாதிக்கிறார். அதன் விளைவுகள்தான் கதை ” என்கிறார், டைரக்டர் டோமின் டி சில்வா .

மேலும் செய்திகள்