ஓடிடி-யில் சாதனை படைத்துள்ள வலிமை திரைப்படம்

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனையை படைத்துள்ளது.;

Update: 2022-04-02 16:53 GMT
சென்னை,

நடிகர் அஜித் நடித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், நல்ல வசூலும் ஈட்டியது. 

இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், ஓடிடி தளத்திலும் வலிமை திரைப்படம் சாதனையை படைத்துள்ளது. அதாவது ஓடிடியில் படம் வெளியான ஒரே வாரத்தில் 500 மில்லியன் பார்வை நிமிடங்களை பெற்று சாதனை செய்துள்ளது. 

இந்த தகவலை படத்தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பார்த்து பின்பு மீண்டும் மீண்டும் தொடர்ந்து பார்க்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.



மேலும் செய்திகள்