சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-28 10:46 GMT
சென்னை,

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வருகிற மார்ச் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்தியராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 2-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்