சைக்கோ திகில் படத்தில் 5 கதாநாயகிகளுடன் ‘அங்காடி தெரு’ மகேஷ்
‘அங்காடி தெரு’ மகேஷ், ‘ஏவாள்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இது, காதல் சைக்கோ திகில் படம். கதைநாயகனாக மகேஷ் நடிக்க, அவருடன் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
முக்கிய நாயகியாக நடிக்கும் மோக்சா, ஒரு பரத நாட்டிய கலைஞர். 2 தெலுங்கு படங்களில் நடித்தவர். இன்னொரு நாயகியாக கவுரி சர்மா நடித்து இருக்கிறார். இவர் சில இந்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர்.
இந்திய மாடல் அழகி மதுமிதாவும் ஒரு கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள நடிகை அக்சரா ராஜ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இன்னொரு மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். மற்றொரு மாடல் ஆர்த்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார்.
நீளமான தாடி வைத்தவர்கள் போட்டியில், உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற பரமேஸ்வர், ஒரு முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். படத்தை இயக்கியிருப்பவர், ஜித்தேஷ் கருணாகரன். ஆர்த்தி கிருஷ்ணா, ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.
காதலியின் மரணத்துக்கு காரணம், முகம் மறைத்து திரியும் சைக்கோ கொலைகாரன்தான் என்று, அவனைக் கொல்வதற்கு கதாநாயகன் தேடி அலையும் கதை, இது.