'அது குகை இல்லை, பணக் குழி' - மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் பேச்சு

தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' படைத்திருக்கிறது.

Update: 2024-12-02 06:41 GMT

திருவனந்தபுரம்,

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.

இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' படைத்திருக்கிறது. இது உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் சிதம்பரம் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'மலையாள சினிமாவில் இருந்து ஒரு வருடத்திற்கு 100 படங்கள் வெளியாகின்றன என்று நினைக்கிறேன். இதற்கு எந்த மந்திரமும் கிடையாது. அடுத்த வருடமே இதை தமிழ், கன்னடம் மற்றும் இந்தி சினிமா கூட செய்யலாம். 'மஞ்சுமெல்' பட பட்ஜெட்டில் 30 முதல் 40 சதவிகித பணம் அந்த குகையை உருவாக்கவே செலவானது. அது குகை இல்லை, பணக்குழி' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்