எஸ்.ஏ.20 ஓவர் லீக் கிரிக்கெட்; தூதர் பட்டியலில் இணைந்த தினேஷ் கார்த்திக்

எஸ்.ஏ.20 ஓவர் லீக் கிரிக்கெட் தொடரின் தூதராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-08-05 11:06 GMT

Image Courtesy: AFP

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தொடரின் தூதராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான டி வில்லியர்ஸ் நியமிக்கபட்டிருந்தார். இந்நிலையில், இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கும் இந்த தொடரின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஏ.20 ஓவர் லீக் கிரிக்கெட் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் தூதராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினேஷ் கார்த்திக் மற்றும் டி வில்லியர்ஸ் இருவரும் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக சேர்ந்து ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்