ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது


ஈரோடு தாலுகா அலுவலகத்தில்  ஜமாபந்தி முகாம்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது
x

ஈரோடு தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஜமாபந்தி முகாம் நடந்தது.

ஈரோடு

ஈரோடு தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஜமாபந்தி முகாம் நடந்தது.

ஜமாபந்தி முகாம்

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி முகாம் நடந்தது.

இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர், ஈரோடு மேற்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட 10 கிராமங்களுக்கான வருவாய் பதிவேடுகள், பட்டா சிட்டா பதிவேடு, வரிவசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, வருவாய் வரைபட பதிவேடு, ஏ-பதிவேடு, சிறப்பு பதிவேடு, நத்தம் அடக்கல் பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவை சங்கிலி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறும்போது, 'ஈரோடு தாலுகா உள்பட 10 தாலுகாவிலும் நேற்று ஜமாபந்தி தொடங்கி, வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது.

அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்தியில், பொதுமக்கள் மனுக்களை வழங்கி பயன் பெறலாம்.

ஈரோட்டில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன' என்றார்.

நலத்திட்ட உதவிகள்

அதைத்தொடர்ந்து பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகையும், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 15 பேருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் உதவித்தொகையும் உள்பட 53 பேருக்கு ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் 4 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, குற்றவியல் அலுவலக மேலாளர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம், தாசில்தார்கள் ஜெயகுமார் (ஈரோடு), பரிமளாதேவி (சமூக பாதுகாப்பு), குமரேசன் (கலால்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு தாலுகாவில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வருகிற 29-ந்தேதி வரை ஜமாபந்தி முகாம் நடக்கிறது.


Related Tags :
Next Story