அடுத்த விசாரணை நடைபெறும் வரை பழைய ரூ.500, 1,000 நோட்டு வைத்திருந்தால் நடவடிக்கை இல்லை


அடுத்த விசாரணை நடைபெறும் வரை பழைய ரூ.500, 1,000 நோட்டு வைத்திருந்தால் நடவடிக்கை இல்லை
x
தினத்தந்தி 3 Nov 2017 10:08 PM GMT (Updated: 3 Nov 2017 10:08 PM GMT)

பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யாத சுதா மிஸ்ரா என்பவர் உள்பட பலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்

புதுடெல்லி,

பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யாத சுதா மிஸ்ரா என்பவர் உள்பட பலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். சுதா மிஸ்ரா தனது மனுவில், ‘‘ரிசர்வ் வங்கி அறிவித்த குறிப்பிட்ட காலத்துக்குள் என்னால் வங்கியில் பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே என்னைப் போல மனுதாக்கல் செய்தவர்கள் மீதான கோரிக்கையை கோர்ட்டு பரிசீலித்து மத்திய அரசுக்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில், ‘இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது’ என்று உறுதி அளிக்கப்பட்டது.


Next Story