ராகு-கேது பகவானுக்கு சிறப்பு பூஜை


ராகு-கேது பகவானுக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 April 2022 5:36 PM GMT (Updated: 24 April 2022 5:36 PM GMT)

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பகவானுக்கு சிறப்பு பூஜை

குடவாசல்:
குடவாசல் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் உள்ள ராகு-கேது பகவானுக்கு சித்திரை ஞாயிற்றுக்கிழமைையயொட்டி  சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து  ராகு தோஷம், கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் ஆகியவற்றுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நாகத்திற்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் வள்ளி கந்தன் ஆகியோர்  செய்து இருந்தனர்.

Next Story