மத்திய பட்ஜெட் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

Update: 2023-02-01 06:47 GMT

புதுடெல்லி

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 9 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபேடுகள், வாட்டர் ஏரோ டிரோன்கள், மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு

2030-க்குள் 5 எம்எம்டி என்ற பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை எட்ட இலக்கு. ஆற்றல் மாற்றத்தை அடைவதற்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு.

Tags:    

மேலும் செய்திகள்