2023-24 புதிய வருமான வரி அடுக்குகள்: உங்கள் வரியை கணக்கிடுவது எப்படி...? விரைவு வழிகாட்டி

புதிய அறிவிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு ரூ. 50,000 நிலையான விலக்கையும் நிதி அமைச்சர் அனுமதித்தார், அங்கு மதிப்பீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் விலக்குகள் அல்லது விலக்குகளை கோர முடியாது.

Update: 2023-02-01 11:39 GMT

புதுடெல்லி

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அது பொய்க்காத வண்ணம் 2023-24 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் நீண்ட நாட்களாக வருமான வரி விலக்குக்காக காத்திருந்தனர். தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. வருமான வரி விலக்கு பற்றிய பெரிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வரி செலுத்துவோர் நலனுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவற்றில், வருமான வரி தொடர்பாக, புதிய வரி விதிப்பில், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்தில் தள்ளுபடி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

முன்னதாக இந்த தள்ளுபடி ரூ.5 லட்சம் வரை கிடைத்தது. இதனுடன் வருமான வரி அடுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கப்படாது. சம்பளம் வாங்கும் வர்க்கத்தினர் இதன் மூலம் பயனடைவார்கள்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில், '2020 ஆம் ஆண்டில், 2.5 லட்சத்தில் இருந்து 6 வருமான அடுக்குகளுடன் புதிய தனிநபர் வருமான வரி முறையை அறிமுகப்படுத்தினேன். இப்போது இந்த அமைப்பில் உள்ள வரி கட்டமைப்பை மாற்றவும், அடுக்குகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்கவும், வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக அதிகரிக்கவும் முன்மொழிகிறேன்.'என்று கூறினார்.

2023 இன் புதிய வருமான வரி வரம்பு

புதிய வரி விதிப்பு திட்டத்தில் 0-3 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.

3-5 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்களுக்கு 5 சதவீத வருமான வரியும்,

6-9 லட்ச ரூபாய் வரை வருமானம் பெற்றால் 10 சதவீத வரியும்

12-15 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும்

15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெற்றால் 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும்.


 


எளிமையான வகையில், ரூ.9 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள ஒருவர் ரூ.45,000 வரி செலுத்துவார், இது சம்பளத்தில் 5 சதவீதமாகும். தற்போது ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.15,000 குறைக்கப்பட்டுள்ளது.

15 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள தனிநபர், 1.87 லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் வரி செலுத்த வேண்டும்.

புதிய அறிவிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு ரூ. 50,000 நிலையான விலக்கையும் நிதி அமைச்சர் அனுமதித்தார், அங்கு மதிப்பீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் விலக்குகள் அல்லது விலக்குகளை கோர முடியாது.

புதிய வரி விதிப்பில், அதிகபட்ச கூடுதல் கட்டணம் 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது மேலும் அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதத்தை 39 சதவீதமாகக் குறைக்கும்.

1992 பட்ஜெட்டில் புதிய வரி அடுக்குகள்

 இந்த தகவல் டுவிட்டரில் இந்தியன் ஹிஸ்டரி பிக் என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1992 பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லாப் என்று தலைப்பு பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி அதில், ஆண்டிற்கு 28000 ஆயிரம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை. 28000 ஆயிரம் ரூபாய்க்கு வரி கிடையாது. 28001 ஆயிரம் முதல் 50000 ரூபாய் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 20 சதவீத வரி. ரூ.50001 முதல் 100000 வரை இருப்பவர்களுக்கு 30 சதவீத வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1992-ம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் அரசில் இருந்த நிதியமைச்சர் மன்மோகன் சிங் வரி விதிப்புகளை மூன்றாகப் பிரித்த காலத்தின் படம் இது. இந்த புகைப்படம் வைரலாக பரவியவுடன், மக்கள் அதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கினர். அதன்படி பலரும் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டுடன் ஒப்பிட ஆரம்பித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்