பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி ரூ.79 ஆயிரம் கோடி: 66 சதவீதம் அதிகரிப்பு

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்ட நிதி ரூ.79 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுகிறது.;

Update: 2023-02-01 20:49 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு 2015-ம் ஆண்டு ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டுள்ளது.பிரதமர் மோடியின் லட்சிய திட்டமாக இது கருதப்படுகிறது.

அடுத்த நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின் கீழான நிதி ஒதுக்கீட்டை ரூ.79 ஆயிரம் கோடியாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது 66 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

38 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

* பழங்குடி இன மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பிரதம மந்திரி பி.வி.டி.ஜி. வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும். இதற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.

* பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இயங்குகிற ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38 ஆயிரம் ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இ-கோர்ட்டுகள்

* சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழை கைதிகள் அபராதம் செலுத்த முடியாதபோதும், அவர்கள் ஜாமீன் தொகை செலுத்த முடியாதபோதும் அவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும்.

* நீதி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் இ-கோர்ட்டு என்னும் இணையவழி கோர்ட்டு திட்டத்தின் 3-வது கட்டம் ரூ.7 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்