ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு பேர் ஓட்டேரியில் கைது
ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரண்டு பேரை போலீசார் ஓட்டேரியில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;
சென்னை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கண்காணிப்பாளர் கீதா மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர் மனோகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையில் போலீசார் ஓட்டேரி பொடி கடை பேருந்து நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு மினி வேனில் 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் 2500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மடக்கி விசாரித்ததில் ஓட்டேரியைச் சேர்ந்த சங்கர் (54) வசந்தகுமார் (40) ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.