ஆட்டோமேட்டிக் சரக்கு ரெயில்!
ஆஸ்திரேலியாவில் சுரங்கப்பணிகளைச் செய்துவரும் பன்னாட்டு நிறுவனமான ரியோடின்டோ தானியங்கி ரெயிலை இயக்கி சாதித்துள்ளது.;
ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள பில்பாராவில் 69 ஆட்டோமேட்டிக் ரெயில்களை ரியோடின்டோ 2012 ஆண்டிலேயே சோதனை செய்யத் தொடங்கிவிட்டது. அந்த முயற்சி, இப்போது வெற்றியடைந்து, பல்வேறு புதுமைகளுக்கு அடித்தளம் அமைத்திருக்கிறது.
''எல்லா சோதனை முயற்சிகளுக்கு பிறகு சமீபத்தில், மாபெரும் பரிசோதனையை நிகழ்த்தினோம். அது, பாலைவனப்பகுதியிலிருந்து பாரபர்டோவிலுள்ள நகரமான வாம்பட் ஜங்ஷனிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிற்கு ரெயிலை ஆட்டோமேட்டிக் முறையில் இயக்கியது. இந்த ரெயிலுக்கான கட்டுப்பாட்டு மையம் பெர்த் நகரில் இருந்தது. இருப்பினும், ரெயில் திட்டமிட்டப்படி, எங்களது கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இனி தானியங்கி ரெயிலின் பாதுகாப்பு, வணிகத்திற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து, நிறைய தானியங்கி ரெயில்களை இயக்க இருக்கிறோம். இவை அனைத்தும், 'கூட்ஸ்' ரக சரக்கு ரெயில்களாகவே இருக்கும்" என்கிறார் ரியோடின்டோவின் அதிகாரியான கிறிஸ் சாலிஸ்பரி.