பெருகும் மணல் தட்டுப்பாடு!

அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் மணல் சுரண்டலால், நிலத்தடி நீர் குறைவதால் மக்கள் சுரங்கங்களை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவது தொடர் கதையாகி உள்ளது.;

Update:2023-10-12 15:56 IST

ஏரி, குளங்கள், ஆறுகளில் மணல் திருட்டு நடப்பது, நமக்கு மட்டும் புதிது அல்ல. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும், இவை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. உலகின் பல நாடுகளில், கனிமங்களுக்காக மணல் சுரங்கங்கள் சட்டங்களை மீறி தோண்டப்படுவதால் உலகளவில் சூழல் பிரச்சினைகள் விஸ்வரூபமாவதோடு, மணலின் அளவும் சுருங்கிவருகிறது. சீனாவில் ஓராண்டுக்கு நடைபெறும் மணல் வணிகத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பவுண்டுகள். சீனாவின் ஷாங்காயில் 2000-ம் ஆண்டிலிருந்து 7 மில்லியன் வீடுகள் கட்டப்பட்டு 23 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

அமெரிக்காவின் மூன்று பெரிய மணல் சுரங்கங்களைவிட சீனாவின் போயாங் ஏரி மணல் சுரங்கம் மிகப்பெரியது. அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் மணல் சுரண்டலால், நிலத்தடி நீர் குறைவதால் மக்கள் சுரங்கங்களை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவது தொடர் கதையாகி உள்ளது. ஆனால் போராட்டங்களுக்குச் செவி கொடுக்காத கும்பல்கள், இன்று வரை மணலை சுரண்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

''கடற்கரைகளிலும், பாலைவனங்களிலும் குவிந்துள்ள மணலால் வருங்காலத்தில் வீடு கட்ட மணல் கிடைக்கும் என்பது பலரின் எண்ணம். ஆனால் நம்முடைய பகுதிகளில் மணல் சுரண்டப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. பிறகு, நாம் பாலைவனத்திற்குத் தேடி போக வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில் நாம் வாழும் பகுதிகளே பாலைவனமாக மாறிவிடும்'' என்கிறார்கள், சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்