எதிர்காலத்திற்காக உருவாக்கப்படும் அதிநவீன நகரங்கள்...!

உலகம் நொடிக்கு நொடி அதிவேகத்தில் நகரமயமாகி வருகிறது. ஐ.நா சபையின் ஆய்வுப்படி 2050-ம் ஆண்டில் நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 6.5 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-30 08:43 GMT

பாரீஸ், நியூயார்க், டோக்கியோ ஆகிய நகரங்களை இதற்கான திட்டமிடுதலோடு, கட்டமைக்கும் வேலைகளும் வேகம் பிடித்துள்ளன. அப்படி, உலக நாடுகளில் தயாராகி வரும் அதிநவீன நகரங்களையும், அதன் சிறப்புகளையும் தெரிந்து கொள்வோமா..!

* சீனா (ஷாங்காய், டாட் டவுன்)

ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள், 1.3 மில்லியன் சதுர அடியில் ஜில்லென ஷாப்பிங் மால், 5 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடியில் சூப்பர் மார்க்கெட், 53 ஆயிரம் சதுர அடியில் கலாசார மையம் என பளபளவென தயாராகும் டாட் டவுனில் பசுமைக்கூரை, மரங்கள் என ஏராளமான இடமுண்டு. 2014-ம் ஆண்டு தொடங்கிய இந்த புராஜெக்ட் மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள். இந்த நகரத்திற்கான பொறுப்பு ஹாங்காங்கின் ஸ்டூடியோ லீட் 8 மற்றும் அமெரிக்காவின் கோயிட்ஷ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

* எகிப்து (கெய்ரோ, கெய்ரோ கேபிடல்)

எகிப்தில் நியூ கெய்ரோ கேபிடல் என்ற பெயரில் உருவாகும் நகரத்திற்கான திட்ட மதிப்பு 45 பில்லியன் டாலர்கள். திட்டம் தொடங்கியது 2015-ம் ஆண்டு. இதில் மொத்தம் 21 மாவட்டங்களில் 5 மில்லியன் மக்கள் வசிக்கலாம்.

1,250 மசூதிகள், தேவாலயங்கள், 5 ஆயிரம் பேர் அமரும் கலாசார மையம், 2 ஆயிரம் பள்ளி, கல்லூரிகளோடு உலகின் மெகா பூங்காவும் இங்கு அமையவிருக்கிறது. சீனா பார்ச்சூன் லேண்ட் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியோடு நடைபெற்று வரும் இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமை பெற்றுவிடும்.

* பிரான்ஸ் (பாரீஸ், ஐரோப்பா சிட்டி)

டச்சு கட்டிட நிறுவனம் ஒன்று ஐரோப்பிய நகரில் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், பிளாசா, கோல்ப் மைதானம் ஆகியவற்றை 8.6 மில்லியன் சதுர அடியில் டிசைன் செய்து கட்டி வருகிறது. 2016-ம் ஆண்டு தொடங்கிய பிளான் மதிப்பு 3.4 பில்லியன் டாலர்கள். திட்டம் 2024-ம் ஆண்டு முடிந்துவிடும்.

* பிரேசில் (சாபாலோ)

வீடுகள், பஸ், சைக்கிள் பாதைகள், பூங்காக்கள் என பளபளவென புத்தம் புதிதாக டிசைன் செய்யப்பட்டு உருவாக்கப்படஇருக்கின்றன. புதிதாக 7 லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 2030-ம் ஆண்டுக்குள், 2 லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்