சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா
நடப்பு ஐ.பி.எல்.போட்டிகளை தவிர வேறு எந்தவிதமான போட்டிகளிலும் விளையாடியது இல்லை என்பதுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் சுயாஷ் சர்மாவிற்கான அறிமுகம்.;
ஆம்...! இப்போது கே.கே.ஆர். அணிக்காக, சுழற்பந்து வீசி வரும் சுயாஷ், இதற்கு முன்பாக லிஸ்ட்-ஏ, முதல்தர கிரிக்கெட்... என எதிலும் பங்கேற்று, விளையாடியதில்லை. நேரடியாக ஐ.பி.எல்.போட்டிகளில் பந்துவீச வந்து, முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல, அடுத்தடுத்த போட்டிகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். அவர் பற்றிய சிறு சுவாரசிய தொகுப்பு.
* சுயாஷ் சர்மா, டெல்லியில் பிறந்தவர்.
* இளம் வயதில் இருந்தே, கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
* இன்று சுழற்பந்துவீச்சாளராக அறிமுகமாகி இருக்கும் சுயாஷ், திறமையான ஆட்டக்காரரும் கூட. உள்ளூர் போட்டிகளில், சிறப்பாக விளையாடி நிறைய ரன்களை குவித்திருக்கிறார்.
* சுரேஷ் பத்ரா, கார்டர் நாத் மற்றும் பங்கஜ் சிங் ஆகிய மூன்று பயிற்சியாளர்களிடம் சுழல் பந்து வீச பயிற்சி பெறுகிறார்.
* இவரது பந்துவீச்சு இயல்பை விட வித்தியாசமாக இருப்பதால், இவரை சுழல் மந்திரவாதி என அழைக்கிறார்கள்.
* 19 வயதே நிரம்பியிருக்கும் சுயாஷ்-ஐ, அடிப்படை விலையான ரூ.20 லட்சம் கொடுத்தே கே.கே.ஆர்.அணி வாங்கி இருக்கிறது. இருப்பினும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருவதுடன், அடுத்தடுத்த ஐ.பி.எல்.சீசன்களில் தனக்கான விலையை, கோடிகளில் நிர்ணயிக்கவும் வழிவகுத்து வருகிறார்.
* முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியில் இடம்பிடிப்பதுதான், சுயாஷ் சர்மாவின் ஆசை.