மூளைக்கு கேடு தரும் துரித உணவுகள்...!
அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுவது மூளையின் வளர்ச்சியை பாதிக்கும் !!;
துரித உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தருபவை. அவை மூளையின் செயல்பாட்டுக்கும் பங்கம் விளைவிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மூளையின் வளர்ச்சி தடைபடும், அதன் அளவும் சுருங்க தொடங்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், "அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுவது மூளையின் வளர்ச்சியை பாதிக்கும். அதனால் ஞாபகத்திறனும் பாதிப்புக்குள்ளாகும். தொடர்ந்து துரித உணவுகளை விரும்பும்போது டோேபாமைன் என்ற ரசாயனம் சுரக்கும். இது துரித உணவுகளை சாப்பிட தூண்டிக்கொண்டே இருக்கும். அதனால் துரித உணவுகள் சாப்பிடுவதை குறைப்பது கடினமான காரியமாகிவிடும்" என்கிறார்கள்.
மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். காலி பிளவரில் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் நிறைந்திருக்கின்றன. இவை மூளையின் நலனையும் பாதுகாக்கும். அதேபோல் தினமும் காலையில் இரண்டு, மூன்று பாதாம் பருப்புகளை சாப்பிடுவது நல்லது. அது நினைவாற்றலை அதிகப்படுத்த உதவும். இதில் ஏ, டி ஆகிய வைட்டமின்கள், புரதச்சத்து, நல்ல கொழுப்பு நிறைந்திருக்கின்றன. இவை ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்த உதவும்.
சமையலில் தினமும் பூண்டு சேர்த்துக்கொள்வது அவசியமானது. அது மூளை சுருங்குவதை தடுக்கும். முட்டைக்கும் மூளையை சுருங்காமல் பாதுகாக்கும் ஆற்றல் இருக்கிறது. அதனால் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட்டு வர வேண்டும். கோழி இறைச்சியில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளடங்கி இருக்கிறது. அதனால் கோழி இறைச்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.