போயிங் 747
1968 செப்.30 அன்று முதல் போயிங் விமானம் 747, அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள எவரெட்டில் தயாரானது.;
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் 16 மாத உழைப்பில் உருவான ஜம்போ ஜெட் விமானம் இதுவே. 1990களில் அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ வாகனமாக மாறியது. டிஸ்னிலேண்டின் சைசிலான விமானம், விமான சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
ராணுவக்கோரிக்கையின் காரணமாகவே ஜம்போ ஜெட் தயாரிப்பில் போயிங் நிறுவனம் ஈடுபட்டது. 1963-ம் ஆண்டு அமெரிக்க விமானப்படை, அதிக தொலைவுக்கு சரக்குகளை கொண்டுசெல்லும் வலிமையான விமானம் தேவை எனக் கூறியது. போயிங் 747 சொகுசு விமானத்திற்கான நோக்கத்தை நிறைவேற்றினாலும் அப்போதைய விமானங்கள் விமானக் கட்டணங்களைக் குறைக்கவே முயற்சித்துக் கொண்டிருந்தன.
747 விமானத்தை தனக்கேற்றபடி மாற்றிய நாசா, ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் கொண்டு செல்லும் வாகனமாக பயன்படுத்தி வருகிறது. ஒருசில நாடுகள், 747 விமானத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன என்றாலும், பல நாடுகள் இன்னும் 747 போயிங் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. அப்படி, பயணிகளை ஏற்றிச்செல்ல தடைவிதித்த நாடுகளில் சரக்குகளை எடுத்துச்செல்லும் விமானமாக தன் பயணத்தை போயிங் 747 தொடர்ந்து கொண்டிருக்கிறது.