விடிய விடிய படிக்கலாம்
தைவான் மற்றும் ஹாங்காங்கில் செயல்படும் எஸ்லைட் நூல் விற்பனை நிலையத்தில் நீங்கள் 24 மணி நேரமும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம்.;
நம் நாட்டில் பெரிய நகரங்களில் நூல் விற்பனை நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்குவதை பார்த்திருக்கலாம். தைவானிலும் ஹாங்காங்கிலும் உள்ள புத்தக ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் கவலைப்பட வேண்டியதே இல்லை!
தைவான் மற்றும் ஹாங்காங்கில் செயல்படும் எஸ்லைட் நூல் விற்பனை நிலையத்தில் நீங்கள் 24 மணி நேரமும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். தேவையானதை வாங்கலாம். ஆமாம், இந்த கடைகள் ஒருபோதும் பூட்டப்படுவதே இல்லை.
1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த எஸ்லைட் ஸ்டோர்களில் ஏகப்பட்ட வாசகர்கள் வந்து படித்துச் செல்லும் நேரம் இரவு 10 மணி முதல் விடியற்காலை இரண்டு மணி வரை. ஒரு சிறந்த புத்தகத்தை ஓய்வு நேரத்தில் எடுத்து படிப்பதும் சுவையான விஷயம்தானே. தைவான் நாட்டின் தலைநகரம் தைபேயில் உள்ள எஸ்லைட் புத்தகக் கடை 'இரவுப் பொழுதை இனிதாகச் செலவிட சிறந்த இடம்' எனத் தேர்வாகி உள்ளது.