வியன்னா ஓபன் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வெரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

Update: 2024-10-23 22:48 GMT

Image courtesy: AFP

வியன்னா:

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் மார்கோஸ் ஜிரோன் உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் 6-2. 7-5 என்ற செட் கணக்கில் மார்கோஸ் ஜிரோனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (காலிறுதிக்கு) முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்