மியாமி ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றுக்கு முன்னேறினார் கோகோ காப்
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.;

கோப்புப்படம்
புளோரிடா,
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), மரியா சக்காரி (கிரீஸ்) உடன் மோதினார்.
அனுபவம் வாய்ந்த இரு வீராங்கனைகள் சந்தித்ததால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்தி கோகோ காப் அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் கோகோ காப் 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப், போலந்தின் மாக்டா லினெட் உடன் மோதுகிறார்.