பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொள்ள உள்ளார்.

Update: 2024-06-03 09:01 GMT

Image Courtesy: AFP

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், பிரான்சின் கோரெண்டின் மவுடெட் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சின்னெர், அடுத்தடுத்த செட்களை 6-3, 6-2, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் சின்னெர் 2-6, 6-3, 6-2, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் பிரான்சின் கோரெண்டின் மவுடெட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொள்ள உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்