ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா, நவோமி ஒசாகா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.;
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஒசாகா, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-1, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் 1-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி நவோமி ஒசாகா 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோதினார். தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எலிஸ் மெர்டென்ஸை வீழ்த்தி ஜெசிகா பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேறினார்.