உலக செஸ் சாம்பியன்ஷிப்; குகேஷ்-லிரென் மோதிய 5வது சுற்று ஆட்டம் 'டிரா'
டி.குகேஷ் - டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
சிங்கப்பூர்,
இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
இந்த நிலையில் 5-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இந்த மோதலில் 40-வது நகர்த்தலில் இருவரும் டிரா செய்ய ஒப்புக்கொண்டனர். 5 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 2½ புள்ளியுடன் சமநிலையில் உள்ளனர். இன்று 6வது சுற்று ஆட்டம் நடக்கிறது.