சர்வதேச பேட்மிண்டன்: லக்சயா சென் சாம்பியன்
இறுதிப்போட்டியில் லக்சயா சென், சிங்கப்பூரின் ஜியா உடன் மோதினார்.
லக்னோ,
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் ஜியா தே உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட லக்சயா சென் 21-6, 21-7 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் .