செஸ் தரவரிசை புள்ளி; சாதனை படைத்த அர்ஜூன் எரிகைசி
அர்ஜூன் எரிகைசியின் எலோ ரேட்டிங் புள்ளி 2800-ஐ எட்டியிருப்பதை சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
புதுடெல்லி,
இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசியின் எலோ ரேட்டிங் புள்ளி 2800-ஐ எட்டியிருப்பதை சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த மைல்கல்லை உலக அளவில் எட்டிய 16-வது வீரர், இந்திய அளவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்து 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த எரிகைசி தற்போது 2801 புள்ளிகளுடன், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார். முதல் 3 இடங்களில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செல்ன் (2,831 புள்ளி), அமெரிக்காவின் பேபியானோ காருணா (2,805), ஹிகரு நகமுரா (2,802) ஆகியோர் இருக்கிறார்கள்.உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடி வரும் தமிழகத்தின் குகேஷ் 5-வது இடத்தில் (2,783 புள்ளி) உள்ளார்.