பாராஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் முழு விவரம்
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.;
பாரீஸ்,
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் இந்தியா 4 பதக்கங்களை அறுவடை செய்தது.
பதக்கப்பட்டியலில் சீனா 6 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. இங்கிலாந்து 6 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என்று 14 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 13-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் 4-வது நாளான இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-
மதியம் 12:00 மணி - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் குரூப் பி - மன்தீப் கவுர் - செலின் ஆரேலி வினோட் (ஆஸ்திரேலியா)
மதியம் 1 மணி - பாரா ஷூட்டிங் - ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று 1 - ஸ்வரூப் மஹாவீர் உன்ஹல்கர்
மதியம் 1:20 மணி - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் - குரூப் ஏ - நிதேஷ் குமார் - பன்சூன் மொங்கோன் (தாய்லாந்து)
மதியம் 1:30 மணி - பாரா சைக்கிள் ஓட்டுதல் - பெண்கள் 500 மீட்டர் டைம் ட்ரையல் - தகுதிச் சுற்று - ஜோதி கதேரியா
மதியம் 1:49 மணி - பாரா சைக்கிள் ஓட்டுதல் தடம் - ஆண்கள் 1000 மீட்டர் டைம் ட்ரையல் - தகுதி சுற்று - அர்ஷத் ஷேக்
மதியம் 2:00 மணி - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் குரூப் ஏ - மனோஜ் சர்க்கார் - யாங் ஜியான்யுவான் (சீனா)
மதியம் 2:40 மணி - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் குரூப் பி - சுகந்த் கடம் - சிரிபோங் டீமரோம் (தாய்லாந்து)
மதியம் 2:40 மணி - பாரா சைக்கிள் ஓட்டுதல் டிராக் - கலப்பு ரெப்சேஜஸ் - அனிதா/ நாராயண கொங்கனப்பள்ளி
மதியம் 3:20 மணி - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் - குரூப் டி - தருண் - லூகாஸ் மஸூர் (பிரான்ஸ்)
மதியம் 3:30 மணி - பாரா ஷூட்டிங் - பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று - ரூபினா பிரான்சிஸ்
மாலை 4:00 மணி - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் - குரூப் சி - மனிஷா ராமதாஸ் - யாங் கியு சியா (சீனா)
இரவு 7:00 மணி - பாரா வில்வித்தை - பெண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன், 1/8 எலிமினேஷன் - சரிதா - எலியோனோரா சார்த்தி (இத்தாலி)
இரவு 8:59 மணி - பாரா வில்வித்தை - மகளிர் தனிப்பட்ட 1/8 எலிமினேஷன் - ஷீத்தல் தேவி - மரியானா ஜூனிகா (சீனா)
இரவு 10:30 மணி - பாரா தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி - பர்வீன் குமார்
இதில் தகுதி சுற்று போட்டிகளில் ஷீத்தல் தேவி உட்பட சிலர் வெற்றி பெற்றால் பதக்க போட்டிகளில் இன்று மோதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.