31 அணிகள் பங்கேற்கும் தேசிய ஆக்கி போட்டி; சென்னையில் நாளை தொடக்கம்

31 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் ஆக்கி போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

Update: 2024-11-03 02:01 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில், 14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், கடந்த முறை 3-வது இடம் பிடித்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, சண்டிகார், உத்தரகாண்ட், மணிப்பூர், பீகார், டெல்லி, கேரளா, ராஜஸ்தான் உள்பட 31 அணிகள் கலந்து கொள்கின்றன. பல்வேறு அணிகளில் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். தினசரி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 ஆட்டங்கள் நடைபெறும். தேசிய போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அணி விவரம்; அருண் பிரசாத், செந்தமிழ் அரசு, பிருத்வி, சோமன்னா, சஞ்சய், செல்வகுமார், ஷியாம் குமார், வேல் ராகவன், திலீபன், லோகேஷ், நிஷி தேவ அருள், செல்வராஜ், சுந்தரபாண்டி, ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி, மனோஜ் குமார், கார்த்தி, மாரீஸ்வரன், சண்முகவேல்.

தலைமை பயிற்சியாளர்: சார்லஸ் டிக்சன், உதவி பயிற்சியாளர்: முத்துகுமரன், மேலாளர்: கிளமென்ட்.

Tags:    

மேலும் செய்திகள்