ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலி அணியை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின

Update: 2024-06-21 02:37 GMT

Image :UEFA EURO 2024

 முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில்,இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. இதனால் முதல் பாதி 0-0 என முடிந்தது.

தொடர்ந்து 2வது பாதியில் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து பதில் கோல் அடிக்க இத்தாலி அணியால் முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என ஸ்பெயின் வெற்றி பெற்றது.

முன்னதாக நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க்- இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என 'டிரா'வில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்