ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா - வங்காளதேசம் ஆட்டம் டிரா
19-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ளது.;

image courtesy:twitter/@IndianFootball
ஷில்லாங்,
19-வதுஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2027-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'சி' பிரிவில் வங்காளதேசம், ஹாங்காக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதின. இரு அணிகளும் சரி சம பலத்துடன் மோதியதால் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.