2026 உலகக்கோப்பை கால்பந்து : நியூசிலாந்து அணி தகுதி

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.;

Update:2025-03-25 03:15 IST
2026 உலகக்கோப்பை கால்பந்து : நியூசிலாந்து அணி தகுதி

image courtesy:twitter/@FIFAWorldCup

ஆக்லாந்து,

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2026-ம் ஆண்டு) நடைபெற உள்ளது.மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வு செய்யப்படும். இதர்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன.

இதில் ஓசியானா கூட்டமைப்பு அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது ரவுண்டின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-நியூ கலிடோனியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதுடன் உலகக்கோப்பைக்கும் தகுதி பெற்று அசத்தியது.

தோல்வியடைந்த நியூ கலிடோனியா அணிக்கு மற்றுமொரு வாய்ப்புள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க கூட்டமைப்புகளை சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கும் கண்டங்களுக்கு இடையேயான பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்றால் நியூ கலிடோனியா உலகக்கோப்பைக்கு தகுதி பெறும்.


Tags:    

மேலும் செய்திகள்