2026 உலகக்கோப்பை கால்பந்து : முதல் அணியாக தகுதி பெற்ற ஜப்பான்

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.;

Update:2025-03-22 07:47 IST
2026 உலகக்கோப்பை கால்பந்து : முதல் அணியாக தகுதி பெற்ற ஜப்பான்

image courtesy:twitter/@FIFAWorldCup

சைதமா,

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2026-ம் ஆண்டு) நடைபெற உள்ளது.மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வு செய்யப்படும். இதர்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன.

இதில் ஆசிய மண்டல அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது ரவுண்டில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஜப்பான் அணி தனது 7-வது லீக் ஆட்டத்தில் பக்ரைனை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜப்பான் தரப்பில் தைச்சி கமடா மற்றும் குபோ தலா ஒரு கோல் அடித்தனர்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி ஒரு டிரா கண்டுள்ள ஜப்பான் அணி தனது பிரிவில் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில்உள்ளது. இன்னும் 3 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் தனது பிரிவில் முதல் 2 இடங்களுக்குள் வருவதை ஜப்பான் உறுதி செய்து விட்டது. இதன் மூலம் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தியது. இதே பிரிவில் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் 2-வது அணிக்கான வாய்ப்பில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம் தொடரை நடத்தும் நாடுகளை தவிர்த்து 2026-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை ஜப்பான் பெற்றது. அத்துடன் தொடர்ச்சியாக 8-வது முறையாக உலகக்கோப்பைக்கு கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்