2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா ரிஷப் பண்ட்? வெளியான தகவல்

ரிஷப் பண்டின் காயம் குறித்து அணி நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா ஒப்பு கொண்டார்.

Update: 2024-10-22 02:06 GMT

Image : AFP 

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. முன்னதாக முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தை சந்தித்தார். குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட முழங்காலில் காயத்தை சந்தித்ததால் மேற்கொண்டு அவர் பேட்டிங் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்காக காயத்தையும் தாண்டி விளையாடிய அவர் 99 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதனால் அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது .ரிஷப் பண்டின் காயம் குறித்து அணி நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா ஒப்பு கொண்டார்.

இந்நிலையில் ,ரிஷப் பண்ட் அடுத்த போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியுடன் இருப்பதாகவும், 2வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்