விஜய் ஹசாரே கோப்பை; தமிழகத்திற்கு எதிராக டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பந்துவீச்சு தேர்வு
32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
விஜயநகரம்,
32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை, தமிழ்நாடு, பெங்கால் உள்பட பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த ஒரு அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். எஞ்சிய இரு அணிகள் பிளே-ஆப் சுற்று மூலம் தேர்வாகும்.
இந்நிலையில், விஜயநகரத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தமிழகம் - ஜம்மு காஷ்மீர் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.