99 ரன்களில் நின்ற நிதிஷ் ரெட்டி.. பிரார்த்தனை செய்த தந்தை.. மெல்போர்னில் நெகிழ்ச்சி சம்பவம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் நிதிஷ் ரெட்டி சதமடித்து அசத்தியுள்ளார்.

Update: 2024-12-28 09:11 GMT

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்திருந்தது. பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி ஜடேஜா மற்றும் பண்ட்டின் விக்கெட்டை விரைவில் பறிகொடுத்து திண்டாடியது. இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் ரெட்டி இணை சிறப்பாக விளையாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய நிதிஷ் ரெட்டி சதம் அடித்து அசத்தினார். 3-வது நாள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் நிதிஷ் ரெட்டி 99 ரன்களில் இருந்தபோது அவர், சதம் அடிக்க வேண்டும் என்று மைதானத்தில் இருந்த அவரது தந்தை கண்களை மூடி பிரார்த்தனை செய்தார். நிதிஷ் பவுண்டரி அடித்து சதத்தை அடித்ததும் உற்சாகத்தில் பொங்கிய அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.மகனுக்காக பிரார்த்தனை செய்த நிதிஷ் ரெட்டி தந்தையின் செயல் பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்