குறைந்த வயதில் சதம்.. ஆஸ்திரேலியாவில் 3-வது இந்திய வீரராக நிதிஷ் ரெட்டி சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ் ரெட்டி சதம் அடித்துள்ளார்.

Update: 2024-12-28 10:09 GMT

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. 'பாக்சிங் டே' என்று பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தி வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். சுந்தர் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடி சதமடித்த நிலையில் களத்தில் உள்ளார்.

இந்த சதத்தின் மூலம் நிதிஷ் ரெட்டி மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த வயதில் சதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. சச்சின் - 18 வயது 256 நாட்கள்

2. ரிஷப் பண்ட் - 21 வயது 92 நாட்கள்

3. நிதிஷ் ரெட்டி - 21 வயது 216 நாட்கள்

4. தத்து பட்கர் - 22 வயது 46 நாட்கள்

Tags:    

மேலும் செய்திகள்