டி.என்.பி.எல்.: திருப்பூர் அணிக்கு 157 ரன்களை இலக்காக நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்

மதுரை தரப்பில் அதிகபட்சமாக சசிதேவ் 41 ரன்கள் அடித்தார்.

Update: 2024-07-13 11:30 GMT

image courtesy: twitter/@TNPremierLeague

கோவை,

தமிழ்நாடு பிரீமியர் லீக் ( டி.என்.பி.எல்.) தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மதுரை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஹரி நிஷாந்த் 17 ரன்களிலும், லோகேஷ்வர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து அஜய் சேட்டன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். கவுஷிக் தனது பங்குக்கு 28 ரன்களும், ஸ்ரீ அபிஷேக் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய சசிதேவ் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினார். வெறும் 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்து்ள்ளது. திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக அஜித் ராம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருப்பூர் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்