டெஸ்ட் கிரிக்கெட்; சொந்த மண்ணில் கேப்டனாக அதிக தோல்விகள் - தோனியை சமன் செய்த ரோகித்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
பெங்களூரு,
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்துக்காக சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்டதன் மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்ட இந்திய கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலியை (2 தோல்வி) முந்தி தோனி, கங்குலி, சச்சினை ரோகித் சர்மா (தலா 3 தோல்விகள்) சமன் செய்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பட்டோடி ( 9 தோல்வி) உள்ளார். அதற்கு அடுத்த படியாக 2வது இடத்தில் கபில் தேவ் மற்றும் முகமது அசாரூதின் ( 4 தோல்வி) ஆகியோர் உள்ளனர். 3வது இடத்தில் ரோகித் சர்மா, பிஷன் பேடி, எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி (3 தோல்வி) ஆகியோர் உள்ளனர்.