நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் சிராஜை நீக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் முகமது சிராஜ்-க்கு பதிலாக ஆகாஷ் தீப்பை கொண்டு வர வேண்டும் என சபா கரீம் கூறியுள்ளார்.

Update: 2024-10-20 11:30 GMT

Image Courtesy: AFP

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்துக்காக சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் முகமது சிராஜ்-க்கு பதிலாக கடந்த இங்கிலாந்து மற்றும் வங்காளதேச தொடரில் அசத்திய ஆகாஷ் தீப்பை கொண்டு வருவதைப் பற்றி இந்தியா யோசிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சபா கரீம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

முகமது சிராஜ் அழுத்தத்தின் கீழ் இருப்பார் என்று கணிக்கிறேன். அதனால் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன் பிளேயிங் லெவன் பற்றி இந்திய அணி விவாதிப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் உங்களுடைய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புதிய பந்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து, 2வது ஸ்பெல்லில் 2வது புதிய பந்தில் நன்றாக வீசுவார் என்று எதிர்பார்ப்பீர்கள். சிராஜ் அதை செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

ஆகாஷ் தீப் கடந்த போட்டிகளில் அதை செய்து ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் இந்திய சூழ்நிலைகளில் ஆகாஷ் தீப் பந்து வீசிய அனுபவத்தை நிறைய கொண்டுள்ளார். ஏனெனில் பெங்கால் அணிக்காக அவர் பல வருடங்கள் உள்ளூரில் விளையாடியுள்ளார். எனவே அது போன்ற உயிரற்ற பிட்ச்களில் பந்து வீசும் அனுபவம் கொண்டவர் உங்களுக்கு தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்