புனே டெஸ்ட்; வெற்றி பெறும் நிலைக்கு எங்களை கொண்டு வந்தது நன்றாக உள்ளது - மிட்செல் சாண்ட்னெர்

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-10-26 02:26 GMT

Image Courtesy: AFP

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர்.

இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுந்தர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் மிட்செல் சாண்ட்னெர் அளித்த பேட்டியில் கூறியதாவது, விராட் கோலியை அப்படி அவுட்டாக்கியது அதிகமான ஆச்சரியம். அது மெதுவான பந்து. அப்படி பந்தை மெதுவாக வீசியதே விக்கெட் எடுக்க சாவியாக இருந்தது. நான் கோணங்களை பின்பற்றி விளையாட விரும்பினேன். வாஷிங்டன் சுந்தர் பந்து வீசியதை பார்த்தேன். நாமும் அதே போல செய்யலாம் என்று நினைத்தேன். குறிப்பாக சரியான வேகத்தை கண்டறிய முயற்சித்தேன்.

போட்டி செல்ல செல்ல அது தாமாக மாறியது. அதை 90 கி.மீ வேகம் என்ற அளவுக்கு வைத்துக்கொள்ள முயற்சித்தேன். எங்களுடைய சொந்த ஊரில் கூட இது போன்ற பிட்ச் கிடைப்பதில்லை. இங்கே ஸ்பின்னர்களுக்கு நல்ல ஆதரவு கிடைப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் நிலையில் எங்களை கொண்டு வந்துள்ளது நல்ல உணர்வை கொடுக்கிறது. இங்கே பேட்டிங் செய்வது எளிதல்ல. ஆனால் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அதை நன்றாக செய்து பார்ட்னர்ஷிப் அமைத்ததுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்