ஐ.பி.எல். தொடரின்போது சேவாக்குடன் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்த மேக்ஸ்வெல்

ஐ.பி.எல். தொடரின்போது சேவாக்குடன் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளார்.

Update: 2024-10-26 12:13 GMT

image courtesy: PTI

சிட்னி,

2017 ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், இந்திய முன்னாள் வீரர் சேவாக் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அணியின் தேர்வு பற்றிய முடிவுகளை எடுப்பதற்காக எங்களுடைய பயிற்சியாளர்களை வாட்ஸப் குரூப்பில் சேர்ப்பது நல்ல முடிவாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அதற்கு ஒப்புக்கொண்ட அனைவரும் தங்களுடைய அணியை குரூப்பில் பகிர்ந்தனர். சேவாக் பகிரவில்லை. அந்த செயல்முறையின் இறுதியில் அணியை தாம் தேர்ந்தெடுப்பேன் என்று சேவாக் தெளிவாக சொல்லி விட்டார். நாங்கள் அப்போது களத்திலும் வெளியையும் தோற்றுக் கொண்டிருந்தோம். சேவாக் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அர்த்தமில்லாத முடிவுகளை எடுத்தார்.

அந்த ஐ.பி.எல். தொடரில் எங்களுடைய கடைசி போட்டி புனேவில் நடைபெற்றது. அங்கே ஈரமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 73க்கு ஆல் அவுட்டானோம். அத்தோடு கதை முடிந்தது. அன்றைய நாள் இரவில் நான் தாமாக சென்று செய்தியாளர்களை சந்தித்தேன். ஆனால் சேவாக் அவர் செல்வதாக சொன்னார். அது முடிந்த பின் அணியின் பேருந்தில் ஏறிய பின் எங்களின் வாட்ஸப் குரூப்பில் நான் வெளியேற்றப்பட்டதை அறிந்தேன். அதனால் என்ன நடக்கிறது? என்று ஆச்சரியப்பட்டேன்.

பின்னர் ஓட்டலை அடைந்த நேரத்தில் எனது தொலைபேசி ஒலித்தது. அதில் உங்களுடைய ஆட்டத்தில் பெரிய ஏமாற்றம் கிடைத்ததாக சேவாக் என் மீது கோபப்பட்டார். கேப்டன் பொறுப்பை ஏற்றதற்காக என்னை குற்றமும் சாட்டினார். அது விரும்ப தகாததாக இருந்தது. அதனால் நாங்கள் நல்ல நிலையில் பிரிந்தோம்.

அதன்பின் உங்களுடைய கருத்துகளால் எனக்குள் இருந்த உங்கள் ரசிகரை இழந்துள்ளீர்கள் அவருக்கு நான் மெசேஜ் செய்தேன். அதற்கு உன்னை போன்ற ரசிகன் எனக்கு தேவையில்லை என்று சேவாக் பதிலளித்தார். அதன் பின் நாங்கள் பேசவில்லை. அப்போதே பஞ்சாப் அணியில் எனது நேரம் முடியப்போகிறது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சேவாக்கை தொடர்வது எனக்கு கவலையும் கொடுக்கவில்லை. ஆனால் சேவாக் அங்கே மேற்கொண்டு ஒரு வருடம் மட்டுமே இருந்தார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்