லங்கா பிரீமியர் லீக்: வெற்றியுடன் தொடங்கிய கண்டி பால்கன்ஸ்
கண்டி பால்கன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 65 ரன்கள் குவித்தார்.
கொழும்பு,
ஐ.பி.எல். போன்று இலங்கையில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5-வது சீசன் நேற்று தொடங்கியது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஹசரங்கா தலைமையிலான் கண்டி பால்கன்ஸ் அணியும், முகமது நபி தலைமையிலான தம்புல்லா சிக்சர்சும் மோதின.
இதில் டாஸ் வென்ற கண்டி பால்கன்ஸ் அணியின் கேப்டன் ஹசரங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தம்புல்லா சிக்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாப்மன் 91 ரன்கள் குவித்தார். கண்டி பால்கன்ஸ் அணி தரப்பில் ஷனகா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புல்லா சிக்சர்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. வெறும் 17.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அந்த அணி 183 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 65 ரன்களும், ஷனகா 46 ரன்களும் குவித்தனர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கலக்கிய ஷனகா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஜாப்னா கிங்ஸ் - கல்லே மார்வல்ஸ் அணிகள் மோதுகின்றன.