இந்திய முன்னணி வீரரான மனீஷ் பாண்டேவை ரூ. 75 லட்சத்திற்கு மீண்டும் கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.
தமிழக வீரரான சித்தார்த் மணிமாறனை ரூ. 75 லட்சத்திற்கு லக்னோ அணி வாங்கியுள்ளது.
உள்ளூர் வீரரான குர்னூர் சிங் ப்ராரை குஜராத் அணி ரூ. 1.30 கோடிக்கு வாங்கியுள்ளது.
முகேஷ் சவுத்ரியை அடிப்படை விலைக்கே (ரூ.30 லட்சம்) சென்னை அணி மீண்டும் வாங்கியுள்ளது.
ஸ்வப்னில் சிங்கை ரூ. 50 லட்சத்திற்கு மீண்டும் பெங்களூரு அணி வாங்கியுள்ளது.
இந்திய இளம் வீரர்களான அர்ஷத் கானை ரூ. 1.30 கோடிக்கு குஜராத் அணியும், தர்ஷன் நல்கேண்டேவை ரூ. 30 லட்சத்திற்கு டெல்லி அணியும் வாங்கியுள்ளன.
இளம் வீரரான ஹிம்மத் சிங் அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் வீரரான ஷேக் ரசீத்தை அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
முஜீப் - உர் - ரஹ்மான், விஜயகாந்த் வியாஸ்காந்த், அகீன் ஹொசைன் மற்றும் அடில் ரஷீத் மற்றும் கேஷவ் மகராஜ் ஆகிய வெளிநாட்டு வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.