ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சனை நடப்பு சாம்பியன் கொல்கத்தா ரூ. 2.80 கோடிக்கு வாங்கியுள்ளது.
ரொமாரியோ ஷெப்பர்டை ரூ. 1.5 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியுள்ளது.
கடந்த ஐ.பி.எல். சீசனில் குஜராத் அணியில் விளையாடிய தமிழக வீரரான சாய் கிஷோரை ஏலத்தில் வாங்க பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரூ. 90 லட்சத்திற்கு வாங்க முற்பட்டது. ஆனால் குஜராத் ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ. 2 கோடிக்கு அவரை மீண்டும் தக்க வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரரான அஸ்மத்துல்லா உமர்சாயை பஞ்சாப் கிங்ஸ் ரூ. 2.4 கோடிக்கு வாங்கியுள்ளது.
இங்கிலாந்து ஆல் ரவுண்டரான வில் ஜேக்ஸை ஏலத்தில் எடுக்க மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இறுதியில் மும்பை அணி ரூ. 5.25 கோடிக்கு வாங்கியது.
இந்திய வீரரான தீபக் ஹூடாவை சென்னை அணி 1.70 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய வீரரான டிம் டேவிட்டை ஏலத்தில் எடுக்க பெங்களூரு - ஐதராபாத் அணிகள் போட்டி போட்டன. இறுதியில் பெங்களூரு ரூ. 3 கோடிக்கு வாங்கியது.
சென்னை அணியின் வீரரான மொயீன் அலியை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
இந்திய வீரரான ஷபாஸ் அகமதுவை ரூ. 2.40 கோடிக்கு லக்னோ அணி வாங்கியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஷெர்பேன் ரூதர்போர்டை குஜராத் அணி ரூ. 2.60 கோடிக்கு வாங்கியுள்ளது.