ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான ஆரோன் ஹார்டியை பஞ்சாப் ரூ. 1.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரான பசல்ஹாக் பரூக்கியை ரூ. 2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது.
சென்னை அணியின் முன்னாள் வீரரான மிட்செல் சான்ட்னெரை ரூ. 2 கோடிக்கு மும்பை ஏலத்தில் எடுத்துள்ளது.
உள்ளூர் வீரர்களான யுத்விர் சாரக்கை ரூ. 35 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணியும், ஆகாஷ் சிங்கை ரூ. 30 லட்சத்திற்கு லக்னோ அணியும், அஷ்வனி குமாரை ரூ. 30 லட்சத்திற்கு மும்பை அணியும் வாங்கியுள்ளன.
இந்திய உள்ளூர் வீரரான குர்ஜப்னீத் சிங்கை ரூ. 2.2 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது.
ஜாத்வேத் சுப்ரமணியன், பிரசாந்த் சோலன்கி, திக்வேஷ் சிங், சீஷன் அன்சாரி, ராஜன் குமார் போன்ற நிறைய உள்ளூர் வீரர்களை ஏலம் எடுக்க எந்த அணிகளும் ஆர்வம் காட்டவில்லை.
முன்னணி வீரர்களான உமேஷ் யாதவ், நவீன் உல் ஹக், முஸ்தாபிசுர் ரஹ்மான், பென் டக்கெட், திவால் பிரெவிஸ், பின் ஆலன் ஆகியோரை எந்த அணியும் எடுக்கவில்லை.
இலங்கை வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாராவை பெங்களூரு அணி 1.60 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவை அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு குஜராத் வாங்கியுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை எந்த அணியும் வாங்கவில்லை.