ஐ.பி.எல். 2025: பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சஷாங்க் சிங்

இந்த தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார்.;

Update:2025-03-18 05:57 IST
ஐ.பி.எல். 2025: பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சஷாங்க் சிங்

Image Courtesy: @IPL

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார். அவரது தலைமையின் கீழ் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதை அந்த அணியின் நட்சத்திர வீரர் சஷாங்க் சிங் தேர்வு செய்துளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, ஐ.பி.எல் 2025 தொடரில் ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் ஜோடி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக இடம்பெறுவார்கள், மூன்றாவது வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார்.

அதன்பின் 4ம் வரிசையில் மார்கஸ் ஸ்டொய்னிஸும், ஐந்தாவது இடத்தில் மேக்ஸ்வெல்லும், 6ம் இடத்தில் தானும், 7ம் இடத்தில் நெஹால் வதேராவும் விளையாடுவோம் என்று கூறியுள்ளார். இதுதவிர்த்து லெவனில் மேலும் ஒரு ஆல் ரவுண்டராக மார்கோ ஜான்சன் இடம் பெறுவார். தொடர்ந்து யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரீத் பிரார் மற்றும் அர்ஷ்தீப் சிங் அகியோரும் லெவனில் இடம்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஷஷாங்க் சிங் தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவன்: ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், சஷாங்க் சிங், நேஹால் வதேரா, மார்கோ யான்சன், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

Tags:    

மேலும் செய்திகள்