2-வது டி20 போட்டி: நியூசிலாந்து வெற்றி பெற சவாலான இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஆகா சல்மான் 46 ரன்கள் அடித்தார்.;

image courtesy:twitter/@TheRealPCB
டுனெடின்,
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி டுனெடினில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டி மழையால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டதன் காரணமாக 15 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்படுகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஆகா சல்மான் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தனர். நிலைத்து விளையாடிய சல்மான் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்த ஷதாப் கான் 26 ரன்களும், ஷாகீன் அப்ரிடி 22 ரன்களும் அடித்தனர்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி, பென் சீயர்ஸ், நீஷம் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 15 ஓவர்களில் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி நியூசிலாந்து பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.