ஐ.சி.சி. சிறந்த டி20 வீராங்கனை விருது 2024: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
2024-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி. சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது. அதன்படி இந்த பரிந்துரை பட்டியலில் இலங்கையின் சமாரி அத்தபத்து, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட், நியூசிலாந்தின் அமெலி கெர், அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.